குறுந்தொகை - 67. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினையாரோ? நினைப்பின் வந்திருப்பாரன்றே" என்று கூறுயது.)
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம் புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல ஒருகா சேய்க்கும் நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. |
5 |
- அள்ளூர் நன்முல்லையார். |
தோழி! கிளி வளைந்த அலகினிடத்திலே கொண்ட வேம்பினது ஒள்ளிய பழமானது புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லனது முனை மாட்சிமைப்பட்ட கூரிய கைந்நகத்திற் கொண்ட பொன்னாபரணத்திற்குரிய ஒரு காணை ஒக்கும் நிலம் கரிந்துள்ள கள்ளியையுடைய பாலை நிலத்தை கடந்து சென்ற தலைவர் என்னை நினையாரோ?
முடிபு: தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?
கருத்து: தலைவர் என்னை மறந்தனர் போலும்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 67. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, கூற்று, தலைவர், கொண்ட, தோழி, குறுந்தொகை, என்னை, சென்ற, எட்டுத்தொகை, சங்க, நினையாரோ