குறுந்தொகை - 47. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகுங் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் வந்தொழுகுந் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்வாயல்லை” என்று கூறி இரவுக் குறியை மறுத்தது.)
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. |
|
- நெடுவெண்ணிலவினார். |
நீட்டித்தலையுடைய வெண்ணிலாவே கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல் பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும் காட்டினிடத்து இரவின்கண் வரும் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை தருவாய் அல்லை.
முடிபு: நெடுவெண்ணிலவே, காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை.
கருத்து: இனி இரவில் வருதல் தகாதாதலின் தலைவர் தலைவியை விரைவில் மணந்து கொள்ளல் வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 47. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, இரவில், குறிஞ்சி, கூற்று, குறுந்தொகை, எல்லி, களவிற்கு, வருநர், நல்லை, அல்லை, காட்டிடை, தலைவரது, எட்டுத்தொகை, சங்க, களவொழுக்கத்திற்கு, நன்மை, வேங்கை