குறுந்தொகை - 400. முல்லை - தலைவன் கூற்று
(தான் மேற்கொண்ட வினை நிறைவேறப் பெற்று மீண்டு வந்து தலைவியைக் கண்ட தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, “இன்று விரைவில் தேர்விட்டு இவனை இல்லின்கண் சேரச் செய்யோமாயின் தலைவியின் காமநோயைக் களையா நிலையினே மாவேமென எண்ணி நன்று செய்தாய்! நீ தேரோடு தலைவியின் உயிரையும் தந்தாய்” என்று பாராட்டிக் கூறியது.)
சேயாறு செல்வா மாயின் இடரின்று களைகலம் காமம் பெருந்தோட் கென்று நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய் |
5 |
இன்று தந்தனை தேரோ நோயுழந் துறைவியை நல்க லானே. |
|
- பேயனார். |
நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்லேமாயின் துன்பமின்றி பெரிய தோளை யுடைய தலைவிக்குக் காமநோயைக் களையமாட்டேமென்று நன்மையைவிரும்பி நினைத்த மனத்தையுடையவனாகி பருக்கையையுடைய மேட்டு நிலத்திடம் விள்ளும்படிபோய் கரம்பை நிலத்திலே புதிய வழியை உண்டாக்கிய தேர்ப்பாகனே நோயினால் வருந்தி உறையும் தலைவியை இறந்துபடாமல்தருதற்குக் காரணமாயினமையின் இன்றைக்கு நீ தேரையா தந்தனை? தலைவியையே தந்தனை.
முடிபு: வலவோய், உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?
கருத்து: உரிய காலத்தே விரைவில் தேரைச் செலுத்திய நின் திறமை பாராட்டற்குரியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 400. முல்லை - தலைவன் கூற்று, தந்தனை, இலக்கியங்கள், தலைவன், குறுந்தொகை, கூற்று, முல்லை, இன்று, காமநோயைக், தேரோ, விரைவில், எட்டுத்தொகை, சங்க, தலைவியின்