குறுந்தொகை - 401. நெய்தல் - தலைவி கூற்று
(இற்செறிக்கப்பட்ட தலைவி, “நாம் தலைவனோடு மெய் தோய்ந்தநட்பு, பின்னர் அவனோடு விளையாடுதலையும் நீக்கியது” என்றுகூறியது.)
அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல் ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள் நக்குவிளை யாடலுங் கடிந்தன் |
5 |
றைதே கம்ம மெய்தோய் நட்பே. | |
- அம்மூவனார். |
அடும்பினது அழகிய மலரைக் கலந்து நெய்தலாலாகிய நெடிய மாலையை யணிந்த நீர் ஒழுகிய கூந்தலையுடைய விளையாட்டு மகளிரை அஞ்சி ஈரத்தையுடையநண்டு கடலுக்குள்ஓடும் துறையையுடைய தலைவனோடு ஒரு நாள் நகைத்து விளையாடுதலையும் அவனுடைய மெய்யைத் தோய்ந்தநட்பானது நீக்கியது இதுவியத்தற்குரியது.
முடிபு: நட்பு கடிந்தன்று; ஐதேகம்ம.
கருத்து: தலைவனோடு அளவளாவியதனால் உண்டான வேறுபாடு அவனைக் காணாமலிருக்கச் செய்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 401. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, தலைவனோடு, கூற்று, விளையாடுதலையும், எட்டுத்தொகை, சங்க