குறுந்தொகை - 396. பாலை - செவிலி கூற்று
(தலைவனுடன் தலைவி சென்றபின் செவிலித்தாய் அவளதுஇளமைத் தன்மையையும் பாலையின் வெம்மையையும் நினைந்துவருந்திக் கூறியது.)
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல் வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் |
5 |
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும் கழைதிரங் காரிடை அவனொடு செலவே. |
|
- கமயனார். |
பாலையும் உண்ணாளாகி பந்தையும் விரும்பாளாகி முன்னர்த் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி இப்பொழுது உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானை வேனிலின் தன்மையையுடைய மலையினிடத்துள்ள வெம்மையாகிய அடிவாரத்தில் மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கும் மூங்கில்கள் உலர்ந்த செல்லுதற்கரிய இடத்திலே அத்தலைவனோடு செல்லுதல் எளிமையையுடையதென்று அறிந்தாளோ?
முடிபு: உண்ணாள், மேவாள், அயர்வோள், இனி அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள்கொல்லோ?
கருத்து: தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதெனநினைத்தனளோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 396. பாலை - செவிலி கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, தலைவி, செவிலி, கூற்று, அவனொடு, உலர்ந்த, செல்லுதல், குத்திய, மேவாள், சங்க, உண்ணாள், எட்டுத்தொகை, எளிதென