குறுந்தொகை - 395. பாலை - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தகாலத்தில் ஆற்றாளாகியதலைவி, “நாம் தலைவனிருக்கும் இடத்திற்குச் செல்வேமாக” என்று தோழிக்குக் கூறியது.)
நெஞ்சே நிறையொல் லாதே யவரே அன்பின் மையின் அருள்பொருள் என்னார் வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே அரவுநுங்கு மதியினுக் கிவணோர் போலக் களையார் ஆயினுங் கண்ணினிது படீஇயர் |
5 |
அஞ்ச லென்மரும் இல்லை அந்தில் அளிதோ தானே நாணே ஆங்கவர் வதிவயின் நீங்கப் படினே. |
|
- ...... |
என் நெஞ்சம் நிறுத் தலைச் செய்ய இயலாது; அத்தலைவர் அன்பின்மை காரணமாக அருளைப் பொருளென்று கருதாராயினர்; வன்கண்மையைமேற்கொண்டு என்னை வற்புறுத்தி அவ்வற்புறுத்தலில்வன்மையைப் பெற்றோர் அரவினால் உண்ணப்படும் சந்திரன்திறத்தில் இவ்வுலகத்திலுள்ளோர் செயல்போல எனது துன்பத்தை நீக்காரானாலும் இனிமையாகக் கண்படுகின்றனர்; அஞ்சற்க வென்று கூறி நம்மைத்தேற்றுவாரும் இங்கே இல்லை; ஆதலின் அங்கே அத்தலைவர் தங்குமிடத்திற்கு நாம் நீங்கிச் சென்றால் நம்நாணம் இரங்கத்தக்கது; அஃது அழியும்.
முடிபு: நெஞ்சு நிறை ஒல்லாது; அவர் அருள்பொருள் என்றார்; வலித்து வல்லுநர் கண் இனிது படீஇயர்; அஞ்சலென்மரும் இல்லை; நீங்கப்படின் நாண் அளிது.
கருத்து: நாம் தலைவர் உள்ள இடத்திற்குச் செல்வேமாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 395. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், இல்லை, தலைவி, பாலை, கூற்று, குறுந்தொகை, நாம், அத்தலைவர், படீஇயர், அருள்பொருள், சங்க, இடத்திற்குச், எட்டுத்தொகை