குறுந்தொகை - 394. குறிஞ்சி - தோழி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவன் முன்பு இனியனாகத் தோற்றி இப்பொழுது இன்னாமைக்கு ஏதுவானான்” என்று தோழி கூறியது.)
முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி முன்னாள் இனிய தாகிப் பின்னாள் அவர்தினைப் புனம் மேய்ந் தாங்குப் |
5 |
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே. | |
- குறியிரையார். |
முழந்தாளையுடைய கரிய பிடியினது மெல்லிய தலையையுடைய கன்று கள் மிக்க மலைப்பக்கத்தூரில் குறத்தி பெற்ற குறிய கைச்சந்தையுடைய பிள்ளைகளோடு சுற்றி ஓடி முற்காலத்தில் இனிமையைத் தருவதாகி பிற்காலத்தில் அவர்களுடைய தினையைமேய்ந்தாற் போல தலைவர்நம்மோடு முன்பு நகைத்து விளையாடியது இப்போது பகைமையையுடையதாகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 394. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, முன்பு, சங்க, எட்டுத்தொகை