குறுந்தொகை - 390. பாலை - கண்டோர் கூற்று
(பாலைநிலவழியே சேர்ந்துபோகும் தலைவனையும் தலைவியையும் கண்டோர், “பொழுது போயிற்று; ஆறலை கள்வரால் ஏதம் நிகழும்”என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.)
எல்லும் எல்லின்று பாடுங் கேளாய் செல்லா தீமோ சிறுபிடி துணையே வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென வளையணி நெடுவேல் ஏந்தி மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே. |
5 |
- உறையூர் முதுகொற்றனார். |
சிறிய பிடிபோன்ற வளுக்குத் துணையாகியவனே சூரியனும் விளக்கம் இலனானான் வணிகர்கூட்டம் வந்து அடைந்ததாக பகைப்புலத்தே கொள்ளும் பகைமையைப் போல வளையை யணிந்த நெடிய வேலை ஏந்தி காவற்காட்டினிடத்தே வந்து பெயரும் ஆறலைப்போரதுதண்ணுமையென்னும் வாத்தியத்தினுடைய முழக்கத்தினது ஒலியையும் கேள் ஆதலின் நீவிரிருவரும் போதலை ஒழிமின்.
முடிபு: சிறுபிடி துணையே, எல்லும் எல்லின்று; குரலின் பாடும் கேளாய்; செல்லாதீம்.
கருத்து: மேலே இந்நிலத்திற் செல்லுதலைத் தவிர்மின்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 390. பாலை - கண்டோர் கூற்று, இலக்கியங்கள், கண்டோர், பாலை, குறுந்தொகை, கூற்று, ஏந்தி, துணையே, வந்து, சிறுபிடி, பெயரும், எல்லும், எட்டுத்தொகை, சங்க, எல்லின்று, கேளாய்