குறுந்தொகை - 389. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டதனைஅவனுடைய குற்றேவன்மகனால் அறிந்த தோழி அக்குற்றேவன் மகனை வாழ்த்தும் வாயிலாக அச்செய்தியைத் தலைவிக்கு உணர்த்தியது.)
நெய்கனி குறும்பூழ் காய மாக ஆர்பதம் பெறுக தோழி அத்தை பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர் நன்றோ மகனே யென்றனென் நன்றே போலும் என்றுரைத் தோனே. |
5 |
- வேட்டகண்ணனார். |
தோழி! பெரிய மலைநாட்டையுடைய தலைவன் வரைவுக்குரியமுயற்சிகளை மேற்கொண்டானாக அவனுக்குமுன் குற்றேவன்மகனே நலமா என்று கேட்டேன் நலமேஎன்று கூறிய அவன் நெய் மிகஊறிய குறும்பூழ் சம்பாரத்தோடு கூடிய கறியாக உண்ணுகின்ற உணவைப் பெறுவானாக!
முடிபு: தோழி, நாடன் வரைந்தென நன்றோ என்றனென்;நன்றேபோலும் என்றுரைத்தோன் ஆர்பதம் பெறுக!
கருத்து: தலைமகனுடைய குற்றேவன்மகனால் தலைவன் வரைவு மேற்கொண்டமையை யுணர்ந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 389. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, தலைவன், கூற்று, குறுந்தொகை, நாடன், வரைந்தென, நன்றோ, பெறுக, குறும்பூழ், சங்க, குற்றேவன்மகனால், எட்டுத்தொகை, ஆர்பதம்