குறுந்தொகை - 380. பாலை - தோழி கூற்று
(தலைவன் முன்பனிப் பருவத்தே வருவதாகக் கூறிச்சென்றானாகக்கூதிர்ப்பருவத்தின் இறுதியில் தோழி தலைவியை நோக்கி, “இனி, முன்பனிப் பருவம் வரும்; தலைவர் நம்மை நினைந்திலர்; என் செய்வேம்!” என்று கூறியது.)
விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர் வென்றெறி முரசின் நன்பல முழங்கிப் பெயலா னாதே வானம் காதலர் நனிசேய் நாட்டர் நம்முன் னலரே யாங்குச்செய் வாங்கொல் தோழி யீங்கைய |
5 |
வண்ணத் துய்ம்மலர் உதிர முன்னர்த் தோன்றும் பனிக்கடு நாளே. |
|
- கருவூர்க் கதப்பிள்ளை. |
தோழி! வானம் மறையும்படி பரவி வேந்தர்கள் பகைவர்களை வென்றுஅறைகின்ற முரசத்தைப் போல நன்மையையுடைய பலமுறைமுழங்கி மேகம் மழை பெய்தலை நீங்காது தலைவர் மிகச்சேயதாகிய நாட்டிலே உள்ளார; அவர்நம்மை நினைத்தாரல்லர்; ஈங்கையிலுள்ளனவாகிய நிறத்தையும் உளையையும்உடைய மலர்கள் உதிராநிற்ப இனிமேல் தோன்றுதற்குரிய கடிய பனிப்பருவத்தில் என்ன செய்வாம்!
முடிபு: தோழி, வானம் பெயல் ஆனாது; காதலர் நனி சேய் நாட்டர்; நம் முன்னலர்; பனிக்கடு நாளில் யாங்குச் செய்வோம்!
கருத்து: தலைவர் தாம் குறித்த பருவத்தே வாராராயின் என் செய்வேம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 380. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, தலைவர், குறுந்தொகை, வானம், கூற்று, காதலர், பனிக்கடு, நாட்டர், முன்பனிப், எட்டுத்தொகை, சங்க, பருவத்தே, செய்வேம்