குறுந்தொகை - 381. நெய்தல் - தோழி கூற்று
(வரைவிடை ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவியதன்பயன் இங்ஙனம் வருந்தியிருத்தல் கொல்?” என்றுதோழி கூறியது.)
தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய் அல்லல் நெஞ்சமோ டல்கலும் துஞ்சாது பசலை யாகி விளிவது கொல்லோ வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற் பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி |
5 |
விலங்குதிரை உடைதருந் துறைவனொ டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே. |
|
- ....... |
வெள்ளை நாரைகள் ஒலிக்கின்ற தண்ணியதாகக் கமழ்கின்றகடற்கரையிலேயுள்ள மலர் நிறைந்த சோலையிலுள்ள செவ்வி மலர்களைக் கலக்கச்செய்து குறுக்கிடும் அலைகள் உடைந்து செல்கின்ற துறையையுடைய தலைவனோடு விளங்குகின்ற பற்கள் வெளிப்டச் சிரித்து மகிழ்ந்ததனால் உண்டான பயன் பழையஅழகு அழிய தோளினது நலம்மெலிய துன்பத்தையுடைய நெஞ்சோடு இரவுதோறும் தூங்காமல் பசலை உண்டாக நாம் அழிவதுவோ?
முடிபு: நக்கதன் பயன் விளிவதுகொல்?
கருத்து: தலைவனோடு நட்புச் செய்ததற்கு நாம் அழிதலோ பயன்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 381. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், பயன், நெய்தல், குறுந்தொகை, தோழி, கூற்று, தலைவனோடு, நாம், சங்க, எட்டுத்தொகை, பசலை, நக்கதன்