குறுந்தொகை - 37. பாலை - தோழி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவியை நோக்கி, ‘‘தலைவர் மிக்க அன்புடையர்; அவர் சென்ற பாலைநிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும் காட்சியைக் கண்டு நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை யெண்ணி விரைவில் மீள்வர்’’ என்று கூறித் தோழி ஆற்றுவித்தது.)
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே. |
|
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
தோழி! தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நல்குதலையும் செய்வர்; அவர் போன வழிகள் பெண்யானையினது பசியை நீக்கும்பொருட்டு பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்தற்கு இடமாக உள்ளன.
முடிபு: நசை பெரிதுடையர்; நல்குவர்; அவர் சென்ற ஆறு அன்பின.
கருத்து: தலைவர் விரைவில் மீண்டு வருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 37. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, சென்ற, பாலை, அவர், குறுந்தொகை, அன்பின, தலைவர், நல்குவர், விரைவில், எட்டுத்தொகை, சங்க