குறுந்தொகை - 356. பாலை - செவிலி கூற்று
(தலைவி தலைவனுடன் போயினபின், “என்மகள் எங்ஙனம் பாலையிற் செல்லும் ஆற்றல் பெற்றாள்?” என்று செவிலி கூறி வருந்தியது.)
நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய |
5 |
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த பாலும் பலவென உண்ணாள் கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே. |
|
- கயமனார். |
கையிலேந்திய செம்பொன்னாலாகிய புனைந்த பாத்திரத்தில் உள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும் மிக்கன என்று கூறி உண்ணாளாகிய திரட்சியமைந்தகுறிய வளையையணிந்த தளிரை ஒத்தமென்மையையுடைய என்மகள் நிழல் அடங்கி அற்றுப் போன நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்தினிடத்தே வீரக்கழலையுடைய தலைவன் தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று நீர்வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மையைக் கொண்ட மிக்க வெப்பத்தை யுடைய கலங்கல் நீரை தவ்வென்னும் ஓசைபட குடிக்க எவ்வாறு வலிய ளானாள்?
முடிபு: உண்ணாளாகிய தளிரன்னோள், போகிக் குடிக்கிய யாங்குவல்லுநள்?
கருத்து: என் மகள் எங்ஙனம் பாலைநிலத்திற் செல்லும் வன்மையை யுடையளானாள்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 356. பாலை - செவிலி கூற்று, பாலை, இலக்கியங்கள், செவிலி, கூற்று, குறுந்தொகை, குடிக்கிய, கலந்த, உண்ணாளாகிய, கூறி, எங்ஙனம், எட்டுத்தொகை, சங்க, செல்லும்