குறுந்தொகை - 352. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தோழியை நோக்கி, “தலைவர் பிரிவினால் மாலைக்காலம் எனக்கு நோய் தருகின்றது” என்பது படத் தலைவி கூறியது.)
நெடுநீ ராம்பல் அடைப்புறத் தன்ன கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை அகலிலைப் பலவின் சாரல் முன்னிப் பகலுறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுன் மாலை உண்மை |
5 |
அறிவேன் தோழியவர்க் காணா ஊங்கே. | |
- கடியலூர் உருத்திரங்கண்ணனார். |
தோழி! ஆழமாகிய நீரின் கண் வளர்ந்த ஆம்பிலினது இலையின் புறத்தைப் போன்ற வளைந்த மெல்லிய சிறையை யுடையனவாகிய கூரிய நகங்களையுடைய வௌவால்கள் அகன்ற இலைகளையுடையபலாமரங்களையுடைய மலைச்சாரலை நோக்கி பகற்காலத்தில் தாம் உறைந்த பழைய மரம் தனிக்கும்படி போகும்! சிறிய புல்லிய மாலைக்காலம் உளதாதலை அத்தலைவரைக் காணாத காலத்தில் உணர்வேன்.
முடிபு: தோழி, அவர்காணாவூங்கு மாலையுண்மை அறிவேன்.
கருத்து: தலைவன் பிரிந்த பின்னர் மாலைக்காலம் எனக்குத் துன்பத்தைத் தருகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 352. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, மாலைக்காலம், குறுந்தொகை, பாலை, கூற்று, போகும், தோழி, நோக்கி, அறிவேன், தலைவன், எட்டுத்தொகை, சங்க, பிரிந்த, காலத்தில்