குறுந்தொகை - 351. நெய்தல் - தோழி கூற்று
(தலைமகன்தமர் தலைவியை மணம்பேசுதற் பொருட்டு வந்தாராக,"அவருக்கு நமர் உடம்படுவார்கொல்லோ?" என்று ஐயுற்ற தலைவியைநோக்கி, "நமர் உடம்பட்டனர்" என்று தோழி கூறியது.)
வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள் அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு உரிமை செப்பினர் நமரே விரியலர்ப் |
5 |
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி இன்னகை ஆயத் தாரோடு இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே. |
|
- அம்மூவனார். |
வளையை அணிந்தோய் நம் சுற்றத்தார் விரைதலையுடைய வளைந்த காலையுடைய வளையின்கண் வாழும் நண்டு தன் கூரிய நகத்தினால் கீறிய ஈரமுள்ள மணலையுடைய நீருள்ள வழி சிதையும்படி இழுமென்னும் ஓசையுண்டாக இடியினது முழக்கத்தையுடைய அலைகள் உடையும் துறையையுடைய தலைவருக்கு நீ உரியாயென்றமையை உடம் பட்டுக் கூறினர்; அதனையறிந்து நான் மகிழ்ந்தேன்; விரிந்த மலர்களையுடைய புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த புலால் நாற்றத்தை யுடைய சேரியிடத்துள்ள இனிய நகையையுடைய மகளிர் கூட்டத் தினரோடு இந்த ஆரவாரத்தையுடையஊர் இனியும் அலர்கூறும் அத்தன்மையையுடையதோ?
முடிபு: வளையோய், நமர் துறைவர்க்கு உரிமை செப்பினர்;உவந்திசின்; இவ்வூர் இன்னும் அற்றோ?
கருத்து: தலைவரது வரைவுக்கு நம் தமர் உடம்பட்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 351. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், நமர், குறுந்தொகை, கூற்று, உரிமை, செப்பினர், புன்னை, துறைவர்க்கு, இன்னும், வளையோய், சங்க, உடம்பட்டனர், எட்டுத்தொகை, உவந்திசின்