குறுந்தொகை - 346. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் மாலைப்பொழுதில் நம்மைப் பிரிந்து செல்ல வருந்துகின்றான்" என்று கூறும் வாயிலாக அவன் இரவுக்குறி விரும்புதலைத்தோழி தலைவிக்குக் கூறியது.)
நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப மன்றம் போழு நாடன் தோழி சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும் தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும் |
5 |
காலை வந்து மாலைப் பொழுதில் நல்லக நயந்துதான் உயங்கிச் சொல்லவும் ஆகா தகி யோனே. |
|
- வாயிலிளங் கண்ணனார். |
தோழி! இளம்பிடியைவிரும்பிய மூங்கில் முளையைப்போன்ற கொம்பையுடைய இளைய களிறு மலையிடத்தே பொருந்தி அங்குள்ளகுறவர் முழங்கியதனால் ஊரிடத்துள்ளமன்றத்தைப் போழ்ந்து செல்லும் நாட்டையுடையதலைவன் பகலில் வந்து சுனையில் மலர்ந்த குவளைமலர்மாலையை நினக்குத் தந்தும் தினைக்கொல்லையினிடத்தில் வீழ்கின்றகிளிகளை நம்மோடு ஓட்டியும் பிறகுவந்த மாலைக்காலத்தில் நல்லநெஞ்ச த்தின் கண்ணே ஒன்றை விரும்பி வருந்தி அக்கருத்தை வெளிப்படச் சொல்லவும்எழுச்சி பெறாமல் குறைவுற்றான்.
முடிபு: தோழி, நாடன் காலைவந்து தந்தும் ஒப்பியும் மாலைப்பொழுதில் நயந்து உயங்கி அஃகியோன்.
கருத்து: தலைவன் மாலைப்பொழுதின் கண்ணும் வரும் இரவுக்குறியை நயந்தான்; அதனைக் குறிப்பினால் அறிந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 346. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், தந்தும், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நாடன், வந்து, சங்க, எட்டுத்தொகை, தலைவன், மாலைப்பொழுதில்