குறுந்தொகை - 342. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள்வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.)
கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம் காவல் மறந்த கானவன் ஞாங்கர்க் கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும் குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக் குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த |
5 |
நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே. |
|
- காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார். |
ஆண்குரங்கு தன்கையால்தோண்டிய மணம் கமழ்கின்றசுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தை காத்தலை மறந்த வேடன் அதன்பின் பழத்தால்மணமுடைய மரந்தோறும் குரங்குகள் படுதற்குரிய வலையைமாட்டிவைக்கும் மலையையுடைய நாட பசிய சுனையினிடத்து மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டியதண்ணிய தழையுடையை அணிந்த இத்தலைவி இங்கே துன்புற நின்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும்நல்வினைப் பயனை அடையாத இயல்புடையாயென்னின் அவ்வியல்புநினக்குத் தகுமோ?
முடிபு: நாட, இவள் வருந்த, பண்பினையெனின் தகுமோ?
கருத்து: நீ இனி இவளை வரைந்து கொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 342. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, தகுமோ, கூற்று, வருந்த, எட்டுத்தொகை, சங்க, மறந்த