குறுந்தொகை - 327. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப ஆற்றை நோக்கி, "நீ தலைவனைக்காட்டிலும் கொடியை" என்று கூறும் வாயிலாகத் தலைவி அவனதுகொடுமையை உணர்த்தியது.)
நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின் நயனில ராகுதல் நன்றென உணர்ந்த குன்ற நாடன் தன்னினும் நன்றும் நின்னிலை கொடிதால் தீய கலுழி நம்மனை மடமகள் இன்ன மென்மைச் |
5 |
சாயலள் அளியள் என்னாய் வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே. |
|
- அம்மூவனார். |
பொல்லாங்கையுடைய ஆறே நாம் செல்லும் மனையிடத்துள்ளமடப்பத்தையுடைய தலைவி இதனைப் போன்ற மெல்லிய சாயலை உடையவள் அளிக்கத் தக்காள் என்று கருதாயாகி மலைப்பக்கம் பொலிவழியும்படி அங்கே வளர்ந்த வாழை மரத்தைப்பெயர்த்துக் கொணர்ந்தனை; ஆதலின் தாம் தண்ணளி செய்தால் வாழ்கின்ற வறியோர்பால் அன்பு இல்லாராதல் நல்ல தென்று உணர்ந்த குன்றநாடனது நிலையைக் காட்டிலும் நினது இயல்பு மிகவும்கொடியது.
முடிபு: கலுழி, புல்லென வாழை தந்தனை; குன்ற நாடன் றன்னினும் நின்னிலை கொடிது.
கருத்து: தலைவன் கொடியன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 327. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, நின்னிலை, கலுழி, வாழை, நாடன், தலைவன், எட்டுத்தொகை, சங்க, உணர்ந்த, குன்ற