குறுந்தொகை - 326. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தினனாகத் தோழிக்குக் கூறுவாளாய்,"தலைவன் ஒரு நாள் என்னைப் பிரிந்திருந்தானாயின் எனக்கு அதனால்உண்டாகும் துன்பம் பலநாள் என்னை வருத்துகின்றது" என்று கூறி,இனிப் பிரிவு நேராதவண்ணம் வரைதலே தக்கதென்பதைத் தலைவிபுலப்படுத்தியது.)
துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர் கடலாடு மகளிர் கான லிழைத்த சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி ஒருநாள் துறைவன் துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே. |
5 |
- ...... |
தோழி! கட்டிய மாலையை யணிந்த மூங்கிலைப் போன்றபருத்த தோளையுடையாராகிய கடலில்நீர் விளையாடலைச் செய்யும் மகளிர் கடற்கரைச் சோலையிலே செய்த சிற்றிலினிடத்தே யாம் தலைவனோடு பொருந்தியநட்பு அத்தலைவன் ஒருநாள் நம்மைப் பிரிந்தால் பல நாளில் வருகின்ற துன்பத்தையுடையது.
முடிபு: தோழி, சிறுமனையிற் புணர்ந்த நட்பு ஒரு நாள் துறைவன்துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னாமைத்து.
கருத்து: தலைவன் சிறிது பொழுது பிரியினும் எனக்குப் பெரியதுன்பம் உண்டாகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 326. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், நெய்தல், தோழி, தலைவன், கூற்று, தலைவி, குறுந்தொகை, ஒருநாள், பன்னாள், வரூஉம், மகளிர், சங்க, நாள், எட்டுத்தொகை, புணர்ந்த