குறுந்தொகை - 304. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் ஆற்றாளெனக்கருதிக் கவன்ற தோழியை நோக்கித் தலைவி, “அன்று இனிதாயிருந்தநட்பைத் தலைவனோடு செய்தேம்; இப்போது அந்நட்பு நமக்கே பகையாய் முடிந்தது” என்று கூறியது.)
கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக் கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து |
5 |
வெண்டோ டிரியும் வீததை கானற் கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே. |
|
- கணக்காயர் தத்தனார். |
தோழி! கொல்லுந்தொழிலிற் பொலிவு பெற்ற கூரிய முகத்தையுடைய எறிகின்ற உளியை தன்னுடைய முகத்தின்கண் அமையும்படி பொருத்தப்பெற்ற உலர்ந்த மூங்கிலின்வலிய காம்பை தாங்குதற்கரிய நீரையுடைய வழியின்கண் எறிந்து கைக்கொள்ளும் வேகத்தையுடையவளைந்த மீன் படகையுடைய பரதவர் கொம்பையுடைய சுறா மீனை எறிய நெடிய கரையினிடத்தே இருந்த குறிய கால்களையுடைய அன்னப்பறவைகளின் வெள்ளிய தொகுதி கெட்டு ஓடும் மலர்கள் நெருங்கிய சோலையையும் தாழையையும் அழகிய தண்ணிய நீரையுமுடைய கடற்கரையையுடையதலைவனோடு நிச்சயமாக பகையைத் தருகின்றதொரு நட்பைச் செய்தேம்.
முடிபு: சேர்ப்பனொடு ஓர் பகைதரு நட்புச்செய்தனெம்.
கருத்து: தலைவனுடைய பிரிவினால் நான் மிக்க வருத்தத்தைஅடைந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 304. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, சேர்ப்பனொடு, பரதவர், பகைதரு, சங்க, எட்டுத்தொகை, செய்தேம்