குறுந்தொகை - 300. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தலைவியை நோக்கி, “நான்நின்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்” என்றானாக அது கேட்டதலைவி, “பிரிவென்பது ஒன்றும் உண்டாங்கொல்?’ என அஞ்சினாளை,“நீ அஞ்சற்க; நான் இவ்வுலகத்தைப் பெறுவேனாயினும் நின்னைப்பிரியேன்” என அவன் வற்புறுத்தியது.)
குவளை நாறுங் குவையிருங் கூந்தல் |
5 |
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே. |
|
- சிறைக்குடி ஆந்தையார் |
குவளை மலரின் மணத்தைவீசுகின்ற தொகுதியாகிய கரியகூந்தலையும் ஆம்பல் மலரின் மணத்தைவீசும் தேன் பொதிந்த சிவந்தவாயையும் ஆழமாகிய நீரில் வளர்ந்த தாமரைப் பூந்தாதைப் போன்ற நுண்ணிய பல தேமற் புள்ளியையுமுடைய மாமை நிறமுடையாய் நீ! யான் பிரிவேனென்று கருதி அஞ்சாதேகொளென்ற எனது சொல்லைக் கேட்டு அஞ்சாதே கொள்; யான்! நினதுநட்பினை குறிய காலையுடையஅன்னப் பறவைகள் குவிதலையுடைய மணலின் கண்ணே தங்கியிருக்கும் கடல் வளைந்த நில வட்டத்தைப்பெறினும் விடுதலை நினையேன்.
முடிபு: மாஅயோயே, நீ அஞ்சலை; யான் நின்னுடை நட்பு விடல்சூழலன்.
கருத்து: நின்னைப் பிரியேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 300. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், குறிஞ்சி, கூற்று, யான், குறுந்தொகை, நின்னுடை, மலரின், ஆம்பல், பிரியேன், எட்டுத்தொகை, சங்க, குவளை