குறுந்தொகை - 299. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, தலைவி தன் தோள் மெலிவைத்தோழிக்குக் கூறுவாளாய் வரைதல் வேண்டு மென்பதை அவனுக்குப்புலப்படுத்தியது.)
இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப் புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல் இணரவிழ் புன்னை யெக்கர் நீழற் புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற் |
5 |
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன் மணப்பின் மாணல மெய்தித் தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே. |
|
- வெண்மணிப்பூதியார். |
தோழி! நிலத்திற்குப் பழையதாகிய கடலின் அலை அளவளாவுகின்ற பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச்சோலையிலுள்ள பூங்கொத்துக்கள் மலர்ந்த புன்னை வளர்ந்த மேட்டிலுள்ளநிழலில் புணர்குறியைப்பெற்ற காலத்தில் எம் கண்கள் தலைவனைப் பார்த்தன; எம்முடையகாதுகள் அவனுடைய சொற்களைக் கேட்டன; எமது பரந்தமெல்லிய தோள்கள் அவன் எம்மைமணந்தால் மாட்சிமைப்பட்ட அழகைப்பெற்று அவன் பிரிந்தால் சோர்வன; இஃது என்ன வியப்பு!
முடிபு: தோழி, எம் கண் கண்டன; செவிகேட்டன; தோள் மணப்பின்நலம் எய்தித் தணப்பின் ஞெகிழ்ப.
கருத்து: தலைவன் இடையிட்டு வருவதால் யான் வருந்துவேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 299. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, குறுந்தொகை, நெய்தல், கூற்று, கேட்டன, அவன், கண்டன, தணப்பின், தலைவன், எட்டுத்தொகை, சங்க, தோள், புன்னை