குறுந்தொகை - 298. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் மடலேறத் துணிந்ததைத் தோழி தலைவிக்கு உணர்த்தியது.)
சேரி சேர மெல்ல வந்துவந் தரிது வாய்விட் டினிய கூறி வைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன் பைதல் நோக்கம் நினையாய் தோழி இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை |
5 |
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர் மடப்பிடிப் பரிசில் மானப் பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே. |
|
- பரணர். |
தோழி! நம்முடைய தெருவின்கண் அடைய மெல்ல வந்து வந்து அருமையின் வாய்திறந்து நம் சிந்தைக்குஇனியவற்றைக் கூறி நாள்தோறும் தான் நினைத்ததொன்றுகைகூடாமையின் ஒளிமாறித் தங்குகின்ற அத்தலைவனது துன்பத்தைப் புலப்படுத்தும் பார்வையை நினைத்துக் காண்பாயாக; அவன் நீண்ட நேரம் இங்ஙனம் என் பின்நிற்றல் இனிய கடுமையையுடைய கள்ளையுடைய அகுதைக்குப் பின்நின்ற வெள்ளியமுனையையுடைய சிறிய கோலைக் கொண்ட அகவன்மகளிர் பெறும் மடப்பம்பொருந்திய பிடியாகிய பரிசிலைப் போல நம்மைக் கண்டு இனிய கூறுதலேயன்றி வேறுஒன்றைக் கருதியதாயிற்று.
முடிபு: தோழி, சேரி சேர வந்து வாய்விட்டுக் கூறிப் பெயர்ந்துஉறையும் அவன் நோக்கம் நினையாய்; அவன் நிலை பரிசில் மானப்பிறிதொன்று குறித்தது.
கருத்து: தலைவன் மடலேற நினைந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 298. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், வந்து, குறிஞ்சி, அவன், கூற்று, குறுந்தொகை, நினையாய், பரிசில், இனிய, நோக்கம், சேரி, எட்டுத்தொகை, சங்க, தலைவன், மெல்ல, கூறி