குறுந்தொகை - 286. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத் தோழியிடம் பணிவுடைய சொற்களைக் கூறி நின்ற தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.)
உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில் ஆர நாறும் அறல்போற் கூந்தல் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. |
5 |
- எயிற்றியனார். |
முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் அமிழ்தம்ஊறுகின்ற அழகிய செய்ய வாயையும் மணம் வீசுகின்ற அகிற் புகையும் சந்தனப் புகையும் மணக்கின்ற கருமணலைப் போலக் கரிய கூந்தலையும் பெரிய அமர்ந்த குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய தலைவியின் புன்னகையோடு செருக்கின பார்வையை நினைத்துப் பார்ப்பேன் போல்வேன்.
முடிபு: கொடிச்சியின் மூரன் முறுவலொடு நோக்கினை உள்ளிக்காண்பென் போல்வல்.
கருத்து: யான் அளவளாவிய தலைவியை இனிக் காண்டல் அரிது போலும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 286. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உடைய, புகையும், எட்டுத்தொகை, சங்க, முறுவலொடு