குறுந்தொகை - 280. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தன்னை இடித்து உரைத்த பாங்கனை நோக்கித் தலைவன் தலைவியினது அருமையைக் கூறியது.)
கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம் ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. |
5 |
- நக்கீரனார். |
நண்பரே நீர் வாழ்வீராக! கேளிர் எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தைத் தன்னிடத்திலே பிணித்துக் கொண்ட அழகிய சிலவாகிய கூந்தலையும் பெரிய தோளையும் உடைய இளைய தலைவியினது சிறிய மெல்லிய மேனியை ஒரு நாள் எம் ஐம் புலனும் இயையும்படி அளவளாவுவேனாயின் யான்! அதன் பின் அரை நாளேனும் வாழ்தலை விரும்பேன்.
முடிபு: கேளிர், வாழி! கேளிர், குறுமகள் ஆகம் ஒரு நாள் புணரப் புணரின் யான் வேண்டலென்.
கருத்து: தலைவி எனக்கு இன்றி அமையாதவள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 280. குறிஞ்சி - தலைவன் கூற்று, கேளிர், தலைவன், இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, புணரின், வேண்டலென், நாள், யான், புணரப், தலைவியினது, எட்டுத்தொகை, சங்க, கொண்ட, குறுமகள்