குறுந்தொகை - 281. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்தவிடத்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தினாளாக அவளை நோக்கி, "தலைவர் கொடிய பாலை நிலத்தைக்கடந்தனரோ என்னும் வருத்தத்தால் ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.)
வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின் கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட் டத்த வேம்பி னமலை வான்பூச் சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் குன்றுதலை மணந்த கானம் |
5 |
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே. | |
- குடவாயிற் கீரத்தனார். |
சிவந்த பொன் அணியை உடையாய் நம் தலைவர் வெள்ளிய மணலின் கண்ணே தழைத்த பசிய அடியையும் கருக்கையும் திரட்சி யையும் உடைய பனையினது உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையின் கண் வைத்த பாலை நிலத்தில் உள்ள வேப்ப மரத்தினது நெருக்கத்தை உடைய வெள்ளிய மலரை சுழித்தல் ஆர்ந்த மயிரை உடைய தலை விளங்கும்படி அணிந்து கொண்டு மலைகளோடு சேர்ந்த காட்டை கடந்து சென்றனரோ?
முடிபு: சேயிழை, நமர் கானம் சென்றனர் கொல்?
கருத்து: தலைவர் பாலையைக் கடந்து சென்றனரோ? இலரோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 281. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, உடைய, வெள்ளிய, தலைவர், குறுந்தொகை, கூற்று, உள்ள, கடந்து, சென்றனரோ, சேயிழை, எட்டுத்தொகை, கானம், சென்றனர், சங்க