குறுந்தொகை - 27. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிவினை இவள் ஆற்றாளாயினாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “நான் ஆற்றியிருப்பவும் என் மாமை யழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” என்று கூறியது).
கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குலென் மாமைக் கவினே. |
5 |
- வெள்ளிவீதியார். |
நல்ல பசுவின் இனிய பாலானது அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் தரையில் சிந்தி வீணானது போல எனது மாமையாகிய பேரழகை எனக்கு அழகு பயந்து நிற்பதாகாமலும் என் தலைவனுக்கு இன்பம் பயவாமலும் பசலையானது தான் உண்ண விரும்பா நிற்கும்.
முடிபு: பால் நிலத்து உக்காங்குப் பசலை மாமைக்கவினை உணீஇயர் வேண்டும்.
கருத்து: தலைவனது பிரிவினால் மாமைக்கவின் அழியப் பசலை பரந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 27. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், பசலை, தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, உணீஇயர், வேண்டும், எட்டுத்தொகை, சங்க