குறுந்தொகை - 207. பாலை - தலைவி கூற்று
(தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது,“இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.)
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென் றத்த வோமை அங்கவட் டிருந்த இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி சுரஞ்செல் மாக்கட் குயவுத்துணை யாகும் கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி |
5 |
நல்லடி பொறிப்பத் தாஅய்ச் சென்றெனக் கேட்டனம் ஆர்வலர் பலரே. |
|
- உறையனார். |
நம்முடைய செலவைத்தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின் செல்லுதல் அரிதாகும் என்று கூறி பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தினது அழகிய கிளையின்கண் இருந்த இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது தனிமையைப் புலப்படுத்தலைக் கொண்ட தெளிந்த ஓசை அருவழியிற்செல்லும் மனிதர்களுக்கு உசாத்துணையாக அமைதற்கு இடமாகிய கற்களையுடைய மலையினது அயலதாகிய யாவரும் நடக்கும் பழையதாகிய சிறியவழியில் தம் நல்ல அடிகள் சுவடு செய்ய தாவி சென்றாரென்று கேட்ட நம்முடைய அன்பர் பலராவர்.
முடிபு: என்று சென்றெனக் கேட்ட ஆர்வலர் பலர்.
கருத்து: தலைவர் செலவை யான் முன்னரே அறிந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 207. பாலை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், பாலை, கூற்று, ஆர்வலர், குறுந்தொகை, சென்றெனக், நம்முடைய, கேட்ட, பலர், தலைவர், எட்டுத்தொகை, சங்க, பிரிந்து