குறுந்தொகை - 206. குறிஞ்சி - தலைவன் கூற்று
(பாங்கன் தன்னை இடித்துரைத்தபோது, “அறியாமையால் நான்காமநோயுற்றேன். இனிச் செய்யுமாறு யாது? நீவிர் அங்ஙனம் செய்யற்க”என்று தலைவன் கூறியது.)
அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவி அன்ன இனியோள் குணனும் இன்ன இன்னா அரும்படர் செய்யு மாயின் உடனுறை வரிதே காமம் குறுக லோம்புமின் அறிவுடை யீரே. |
5 |
- ஐயூர் முடவனார். |
அறிவையுடையவரே அமிழ்தத்தைப்போன்ற அழகிய இனிய சொற்களையுடைய மனத்தாலுணர்தல் மாத்திரையே யியன்ற அத்தகையஇனிமையையுடையோளது குணமும் இத்தகைய இன்னாதனவாகிய துன்பங்களை உண்டாக்குமாயின் காமமானது ஒருங்கு வாழ்தற்கு அரிது; ஆதலின் அதனை அணுகுதலைப்பரிகரிமின்.
முடிபு: அறிவுடையீரே, இனியோள் குணனும் படர்செய்யுமாயின்காமம் உடனுறைவரிது; குறுகல் ஓம்புமின்.
கருத்து: காமம் என்னால் தாங்கற்கரியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 206. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, காமம், குணனும், எட்டுத்தொகை, சங்க, இனியோள்