குறுந்தொகை - 204. குறிஞ்சி - பாங்கன் கூற்று
(தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தது.)
காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே. |
5 |
- மிளைப்பெருங் கந்தனார். |
பெரிய தோளையுடையதலைவ காமம் காமமென்று அதனைஅறியார் இகழ்ந்து கூறுவர்; அக்காம மானது வருத்தமும் நோயும் அன்று; பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில்தழைத்த முதிராத இளைய புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புற்றாற்போல நினைக்குங் காலத்து அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும்.
முடிபு: பெருந்தோளோயே, காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்று; அது விருந்தே.
கருத்து: காமம் நம்முடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 204. குறிஞ்சி - பாங்கன் கூற்று, காமம், இலக்கியங்கள், பாங்கன், குறுந்தொகை, குறிஞ்சி, கூற்று, விருந்தே, அன்று, பிணியும், அணங்கும், எட்டுத்தொகை, என்ப, சங்க