குறுந்தொகை - 17. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தன் குறையை நிறைவேற்ற உடன்படாத தோழியை நோக்கித் தலைவன், ‘‘காமம் மிக்கவர்கள் மடலேறுவார்கள்; வரைபாய்தல் முதலியவற்றையும் செய்யத் துணிவார்கள்’’என்று தான் மடலேற எண்ணியிருத்தலை உலகின்மேல் வைத்துக் கூறியது.)
மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே. |
|
- பேரெயின் முறுவலார். |
காம நோயானது முதிர்வுற்றால் பனை மடலையும் குதிரை எனக் கொண்டு ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும் அடையாள மாலையைப் போல தலையில் அணிந்து கொள்வர்; வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவர்; தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறு செயலை உடையரும் ஆவர்.
முடிபு: காமம் காழ்கொளின் மடலும் ஊர்ப; கண்ணியுஞ் சூடுப; ஆர்க்கவும் படுப; பிறிதும் ஆகுப.
கருத்து: நான் மடலூர எண்ணியுள்ளேன.்
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 17. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, சூடுப, படுப, கருத்து, ஊர்ப, வரைபாய்தல், எட்டுத்தொகை, சங்க, மடலும்