குறுந்தொகை - 127. மருதம் - தோழி கூற்று
(தலைவன் தலைவியின்பால் பாணனைத் தூதாக விட்டுத் தான் பின் நிற்பத் தோழி அவனை நோக்கி, “நின்பாணன் பொய்யனாயினன்; அதனால் பாணர் யாவரும் பொய்யர் போலுமென எண்ணுவே மாயினேம்” என்று கூறி வாயில் மறுத்தது.)
குருகுகொளக் குளித்த கெண்டை அயலது உருகெழு தாமரை வான்முகை வெரூஉம் கழனியம் படப்பைக் காஞ்சி யூர ஒருநின் பாணன் பொய்ய னாக உள்ள பாணர் எல்லாம் |
5 |
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே. | |
- ஓரம் போகியார். |
நாரை கவர்ந்து கொள்ள அதன் வாயினின்று தப்பி நீருட் குளித்த கெண்டை மீன் பின்பு அயலதாகிய நிறம் பொருந்திய தாமரையின் வெள்ளிய அரும்பை அஞ்சும் வயற் பக்கங்களையுடைய காஞ்சி மரங்கள் வளர்ந்த ஊரையுடைய தலைவ நின்பாணன் ஒருவன் பொய் பேசுவா னாயினமையால் மற்றுள்ள பாணர்கள் யாவரும் நீ அகன்றதனால் தனித்திருக்கும் மகளிருக்கு பொய்யரைப் போலத் தோற்றுவர்.
முடிபு: ஊர, நின் பாணன் பொய்யனாக, நீ அகன்றிசினோர்க்கு உள்ள பாணரெல்லாம் கள்வர் போல்வர்.
கருத்து: நின் தூதுவனாகிய பாணன் பொய்யன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 127. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, பாணன், குறுந்தொகை, மருதம், கூற்று, உள்ள, நின், காஞ்சி, கள்வர், பாணர், எட்டுத்தொகை, சங்க, யாவரும், குளித்த, கெண்டை