குறுந்தொகை - 119. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து மீண்ட தலைமகனது வேறுபாடு கண்ட பாங்கன், “நினக்கு இஃது எற்றினான் ஆயிற்று?” என்றவழி, “ஓர் இளைய மகளால் ஆயிற்று” என்று தலைவன் கூறியது.)
சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை கான யானை அணங்கி யாஅங்கு இளையள் முளைவாள் எயிற்றள் வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே. |
|
- சத்திநாதனார். |
தோழி! இளமையை உடையவளும் நாணல் முளையைப் போன்ற ஒளியை உடைய பற்களை உடையவளும் வளையினை உடைய கையினளு மாகிய ஒருத்தி சிறிய வெள்ளிய பாம்பினது அழகிய கோடுகளையுடைய குட்டியானது காட்டுயானையை வருத்தினாற் போல எம்மை வருந்தச் செய்தனள்.
முடிபு: இளையள், எயிற்றள், கையள் எம் அணங்கியோள்.
கருத்து: ஓர் இளைய மகள் என்னைத் தன் அழகினால் வருத்தினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 119. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, எயிற்றள், உடையவளும், உடைய, இளையள், இளைய, எட்டுத்தொகை, சங்க, அணங்கி