குறுந்தொகை - 120. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவன் குறியிடத்தில் வந்ததைக் குறிப்பால் அறிவித்த காலத்தில் தலைவி அவன் வருதற்கு முன்னரே குறியல்லாததைக் குறியென றெண்ணிச் சென்று வறிதே மீண்டவளாதலின் வாராதொழிய, வருத்தமுற்ற தலைவன், “தலைவி நன்மையை உடையாள் என்பதை அறிந்தது போலப் பெறுதற் கரியாள் என்பதையும் இதுகாறும் அறிந்திலையே!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியா தோயே. |
|
- பரணர். |
நெஞ்சே! பொருளில்லாத வறிஞன் இன்பத்தை விரும்பினாள்போல பெறுதற்கரியதை நீ விரும்பினை; நீ நம் தலைவி நமக்கு நன்மை தருபவளாதலை அறிந்ததுபோல நாம் நினைக்கும் பொழுதெல்லாம் நமக்கு எளியளாய் வருவதின்றிப் பெறற்கரியளாதலையும் அறியாயாயினை.
முடிபு: நெஞ்சே, அரிது வேட்டனை; அறியாதோய்.
கருத்து:தலைவி பெறுதற்கரியள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 120. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், குறிஞ்சி, நெஞ்சே, குறுந்தொகை, கூற்று, தலைவி, நமக்கு, ஆகுதல், சங்க, எட்டுத்தொகை