கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 149
நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக, அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்: கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால், | 5 |
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன் எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்; கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால், சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன் | 10 |
வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்; ஆங்கு அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்: சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த வினை வரு பருவரல் போல, | 15 |
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 149, இலக்கியங்கள், கலித்தொகை, காண், கலித்தொகை, நெய்தற், எறியாது, அஃது, விடாதே, ஆயினும், வினை, தமியவே, எட்டுத்தொகை, சங்க, நெஞ்சு, தேயுமால், மற்று