கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 148
தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு, வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்போல், கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர; அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல, மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப; | 5 |
இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப; செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை! மாலை நீ, இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்; அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய | 10 |
துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு? மாலை நீ, கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்; நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண் அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? | 15 |
மாலை நீ, எம் கேள்வற் தருதலும் தருகல்லாய்; துணை அல்லை; பிரிந்தவர்க்கு நோய் ஆகி, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி, திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு? என ஆங்கு | 20 |
ஆய் இழை மடவரல் அவலம் அகல, பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல, போய் அவர் மண் வௌவி வந்தனர் சேய் உறை காதலர் செய் வினை முடித்தே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 148, மாலை, இலக்கியங்கள், கலித்தொகை, நெய்தற், நினக்கு, கலித்தொகை, தக்கதோ, நீத்த, வினை, எட்டுத்தொகை, சங்க, செய்தாய்மன்