கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 150
| அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான் இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும், கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல் மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென, | 5 |
|
விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்; இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால், அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர் பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம் பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ? | 10 |
|
கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம், 'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர், உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின் உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ? கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால், | 15 |
|
'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர், புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின் கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ? ஆங்கு அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த | 20 |
|
பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர் பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் மை ஈர் ஓதி மட மொழியோயே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 150, இலக்கியங்கள், நின், கலித்தொகை, கலித்தொகை, நெய்தற், என்னார், பொருட்கு, அகன்றவர், காய்ந்த, தலைக், எட்டுத்தொகை, சங்க, அன்ன, இனையையாய்