அகநானூறு - 60. நெய்தல்
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, |
5 |
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; 'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, கோதை ஆயமொடு வண்டல் தைஇ, |
10 |
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக் கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. |
15 |
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 60. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க