அகநானூறு - 61. பாலை
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத் தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து ஆழல் வாழி, தோழி! தாழாது, |
5 |
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ, அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் |
10 |
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் மழ புலம் வணக்கிய மா வண் புல்லி விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி |
15 |
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் ஒண் கேழ் வன முலைப் பொலிந்த நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. |
தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 61. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, தோழி, நெடு, நாள், புலம், எட்டுத்தொகை, சங்க