அகநானூறு - 59. பாலை
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் |
5 |
மரம் செல மிதித்த மாஅல் போல, புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் படி ஞிமிறு கடியும் களிறே தோழி! சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், |
10 |
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் தாம் பாராட்டிய காலையும் உள்ளார் |
15 |
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 59. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நெடு, தோழி, சங்க, எட்டுத்தொகை