அகநானூறு - 350. நெய்தல்
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப, எறி திரை ஓதம் தரல் ஆனாதே; துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப, வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; |
5 |
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது, ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச் சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப! இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, |
10 |
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண், உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! |
15 |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 350. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, சிறு, எட்டுத்தொகை, சங்க