அகநானூறு - 349. பாலை
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய, எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன் தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி, உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, |
5 |
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக, அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு, எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள, திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை |
10 |
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன் வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை கல் ஊர் பாம்பின் தோன்றும் சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே? |
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 349. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க