அகநானூறு - 351. பாலை
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி, பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப, பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற, |
5 |
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை, அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில், புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம், மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி, |
10 |
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண் விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப, திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி, இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை, வருந்து தோள் பூசல் களையும் மருந்து என |
15 |
உள்ளுதொறு படூஉம் பல்லி, புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே? |
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 351. பாலை, இலக்கியங்கள், பாலை, அகநானூறு, பொருள், எட்டுத்தொகை, சங்க