அகநானூறு - 312. குறிஞ்சி
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, இரவின் வரூஉம் இடும்பை நீங்க, வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, |
5 |
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப் பெரு மலை நாடன் மார்பு புணை ஆக, ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி! வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார் |
10 |
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த அடு புகழ் எஃகம் போல, கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே! |
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 312. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, தோழி, எட்டுத்தொகை, சங்க