அகநானூறு - 206. மருதம்
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் |
5 |
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம் மா மேனி, ஆய்இழை, மகளிர் ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து ஆராக் காதலொடு தார் இடை குழைய, |
10 |
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து, அடுபோர் வேளிர் வீரை முன்துறை, நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, பெரு பெயற்கு உருகியாஅங்கு, |
15 |
துஇதிருந்ழை நெகிழ்ந்தன, தட மென் தோளே? |
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 206. மருதம் , இலக்கியங்கள், அகநானூறு, மருதம், வாயில், மாத், சங்க, எட்டுத்தொகை