அகநானூறு - 158. குறிஞ்சி
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, |
5 |
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் |
10 |
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும், நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, |
15 |
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் எந்தையும் இல்லன் ஆக, அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே? |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 158. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, தலைமகன், வேண்டு, சங்க, எட்டுத்தொகை