அகநானூறு - 157. பாலை
அரியற் பெண்டிர் அலகிற் கொண்ட பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த அரி நிறக் கலுழி ஆர மாந்தி, செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர், |
5 |
5 வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல் பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி, கான யானை கவளம் கொள்ளும் அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார் நெஞ்சு உண மொழிபமன்னே தோழி! |
10 |
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய், வினை அழி பாவையின் உலறி, மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே! |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 157. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க