அகநானூறு - 156. மருதம்
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி தூக்கியன்ன, செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் மூதா தின்றல் அஞ்சி, காவலர் பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
5 |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் தீம் புனல் ஊர! திறவதாகக் குவளை உண்கண் இவளும் யானும் கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
10 |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
15 |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 156. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க