அகநானூறு - 15 . பாலை
எம் வெங் காமம் இயைவது ஆயின், மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, |
5 |
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் செறிந்த சேரிச் செம்மல் மூதூர், அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல தோழிமாரும் யானும் புலம்ப, சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் |
10 |
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, |
15 |
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு குன்ற வேயின் திரண்ட என் மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே! |
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 15 . பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செறிந்த, அன்ன, சங்க, எட்டுத்தொகை, பூண்