அகநானூறு - 16. மருதம்
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும், மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய், நாவொடு நவிலா நகைபடு தீம் சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை, |
5 |
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே! கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் காணுநர் இன்மையின், செத்தனள் பேணி, பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை, வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து, |
10 |
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், 'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை? நீயும் தாயை இவற்கு?' என, யான் தற் கரைய, வந்து விரைவனென் கவைஇ களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா, |
15 |
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின் மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே? |
20 |
பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 16. மருதம் , இலக்கியங்கள், அகநானூறு, மருதம், கண்டு, யாவரும், சங்க, எட்டுத்தொகை, மாசு